இயக்குனர் அட்லி தமிழில் விஜய்யை வைத்து நான்கு ஹிட் படங்கள் கொடுத்த நிலையில் அடுத்து ஐந்தாவது படத்தில் ஹிந்தியில் ஷாருக்கானுடன் கூட்டணி சேர்ந்தார். ஐந்தே படங்களில் சினிமாவில் உச்சத்தை அடைந்த ஒரே இயக்குனர் இவர் தான். என்னதான் இவர் எடுக்கும் படங்கள் பல படங்களின் கலவையாக இருந்தாலும் சரி, படங்கள் நல்ல வரவேற்பும் பெறுகிறது. கூடவே வசூலும் பெறுகிறது. ஜவான் என்ற பெயரில் வெளியான அந்த படம் மிகப்பெரிய ஹிட் ஆவி ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டியது. இந்நிலையில் அட்லி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். அவர் மேடையில் வந்து அமர்ந்ததும் தொகுப்பாளர் எடுத்தவுடன் ஹிந்தியில் நீண்ட நேரமாக பேசி அவரை வரவேற்கிறார்.
அட்லீக்கு ஹிந்தி தெரியாது என எல்லோருக்கும் காட்டத்தான் அந்த தொகுப்பாளர் அப்படி பேசிக் கொண்டிருக்கிறார். பாலிவுட் சினிமா என்றாலே இது போன்ற கோளாறுகள் இருக்கத்தான் செய்யும்.
அதன் பிறகு அட்லீ அந்த தொகுப்பாளரது மூக்குடைக்கும் விதமாக ஒரு பதில் கொடுத்துள்ளார். நான் நல்லா இருக்கேன், நீங்க?? என தமிழில் ஒரு பதில் சொல்ல, அந்த தொகுப்பான ஷாக் ஆகிவிட்டார். ஹிந்தியில் நலம் விசாரித்த தொகுப்பாளருக்கு தமிழில் பதில் சொன்ன அட்லீக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
