Font size:
Print
அடுத்த 36 மணிநேரத்திற்கு செல்லுபடியாகும் வானிலை முன்னறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், மாலை அல்லது இரவில் நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மேல் மற்றும் தென் மாகாணங்களின் கரையோரப் பகுதிகளில் காலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்.
இதேவேளை, நாட்டின் பல பாகங்களிலும் மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சூழ்நிலை தற்போதும் சாதகமாக இருப்பதால் மின்னலினால் ஏற்படும் விபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. (P)
புதுக்குடியிருப்புக்கு நாளை மறுதினம் பிரதமர் ஹரிணி | Thedipaar NewsRelated Posts
